தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு இவர் டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடித்ததால் இவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது மேலும் இவருக்கென ரசிகர்கள் உருவாகினார்.
தொடர்ந்து சினிமா உலகில் வெற்றியை கண்டு வந்த இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது அதன் பிறகு இருவரும் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி அனைவரது முன்னிலையிலேயும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு இந்த ஜோடி சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் கலக்கி கொண்டு ஓடுகிறது.
திருமணமான பிறகும் நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குறையாமல் இருந்து வருகின்றன நயன்தாரா கையில் தற்பொழுது ஜாவன், கோல்ட், கனெக்ட், அன்னபூரணி ஆகிய திரைப்படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் திருமணமான பிறகு நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி இருக்கிறார்கள்.
வேறு வழி இல்லாமல் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஒப்பந்தம் செய்து வருகின்றனர். முன்பெல்லாம் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் இருக்கின்ற இடம் தெரியாமல் நடித்து விட்டு போவார் ஆனால் தற்பொழுது எல்லாம் பல கண்டிஷன் போடுகிறாராம். யாராவது படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினால் இப்பொழுது வர முடியாது உங்களுக்கு அவசரம் என்றால் வேறு யாராவது ஒரு நடிகை வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி பேசி விடுகிறாராம்.
அதன்படி அன்னபூரணி திரைப்படத்திற்காக 10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தை எடுக்க படக்குழு ரெடியா இருந்து வந்த நிலையில் நயன்தாரா இந்த படத்தை அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என கூறி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தொடர்ந்து புதுப்புது கண்டிஷன் போடுவதால் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.