வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு பல லட்சம் அள்ளி கொடுத்த நயன்தாரா – கண்ணெதிரே பார்த்து அதிர்ந்துப்போன மாமியார்..! வெளியே கசிந்த தகவல்.

0
nayanthara
nayanthara

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தனது திரையுலகை பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோகளுடன் நடிப்பதால் அவரது மார்க்கெட் எந்த ஒரு சமயத்திலும் குறைந்ததே கிடையாது. இப்பொழுது கூட இவர் அஜித், விஜய்..

ரஜினி, சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி போன்ற டாப் ஹீரோக்களின் படங்களின் நடிப்பது இல்லையென்றால் சோலோவாக படங்கள் நடித்து வெற்றிகளை குவித்து வருகிறார். தற்பொழுது நடிகை நயன்தாரா கையில் கோல்ட், கனெக்ட், நயன்தாரா 75, ஜவான் மற்றும் பெயரிடப்படாத ஒரு சில படங்களிலும்..

இவர் கமிட்டாகி இருக்கிறாராம். நடிகை நயன்தாரா சினிமா உலகில் இப்படி ஓடினாலும், நிஜ வாழ்க்கையிலும் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைக்கு அம்மாவாகி தற்பொழுது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாராவின் மாமியார் நயன்தாரா குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நயன்தாரா வீட்டில் 8 பேர் வேலை செய்கிறார்கள் நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் ஒரு முறை பணியாளராக இருக்கும் பெண் சோகமாக இருப்பதை பார்த்த நயன்தாரா என்ன ஆச்சு என கேட்டாராம்.

அதற்கு தனக்கு 4 லட்சம் கடன் இருக்கிறது என சோகமாக அவர் கூற உடனே அந்த 4 லட்சம் பணத்தை கொடுத்து கடனை அடைத்து விடும்படி சொன்னாராம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை   போல கேரளாவில் இருக்கும் நயன்தாராவின் அம்மாவும் உதவுகிறார் பணியாளருக்கு கஷ்டம் என அறிந்து கையில் இருக்கும் வளையல்களை அவர் கழட்டி கொடுத்திருக்கிறார் என கூறினார்.