கண்களாலேயே காதல் செய்யும் நயன்தாரா – புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்.

nayanthara-and-vignesh
nayanthara-and-vignesh

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கைப்பற்றி நடித்து வருவதால் அவரது மார்க்கெட் இன்னும் உச்சத்திலேயே இருக்கிறது தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி உள்ளாராம்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் லயன் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதால் ஹிந்தியில் இவர் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். சினிமா உலகில் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் தனது காதலன் உடன் அவ்வப்போது இணைந்து படங்களை தயாரிப்பது, படங்களில் நடிப்பதுமாக இருந்து வருகிறார்.

ஏன் இப்பொழுது கூட இவர ராக்கி, கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்தவர் அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல  ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்து அசத்தியுள்ளார் சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் மீதி நேரங்களில் தனது வாழ்க்கையை  செம ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் முக்கிய நாட்களில் புகைப் படங்களை வெளியிடுவது மேலும் வெளியே எங்கே சென்றாலும் தனது காதலன் விக்னேஷ்  அழைத்துக் கொண்டு வலம் வருவதை வழக்கமாக வைத்துள்ளார் இப்பகூட கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடி காதலன் விக்னேஷ் சிவனுடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது ஒரு சில நிமிடங்களில் மட்டுமே நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படம்  40ஆயிரம் லைக்குகளை அள்ளி குவித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய லுக்கிலேயே தெரிகிறது  கல்யாணத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக் கூறிய அந்த புகைப்படத்தில் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் ரசிகர்கள். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

nayanthara-and-vignesh
nayanthara-and-vignesh