நாட்கள் செல்ல செல்ல.. விக்னேஷ் சிவனை அதிகமாக லவ் பண்ணும் நயன்தாரா.. எதனால் தெரியுமா.? வாங்க பார்க்கலாம்.

nayanthara and vignesh
nayanthara and vignesh

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து டாப் நடிகர் படங்களில் நடித்து வெற்றி மேல் வெற்றியை குவிப்பதால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக இருக்கிறார் மேலும் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தையும் நயன்தாராவை வைத்திருக்கிறார். இவர் கடைசியாக ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,  சமந்தா ஆகியோர்களுடன் கைகோர்த்து நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளிவர இருக்கிறது அதனை தொடர்ந்து ஆக்சிஷன், connect மற்றும் அஜித்தின் 61 வது திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்.

இதன் மூலம் அஜித் – நயன்தாரா ஐந்தாவது முறையாக இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது பல வருடம் காதல் வயப்பட்டு இருப்பது ஏன்.. அவருடன் இன்னும் காதல் அதிகமாக இருப்பது ஏன், என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு காதலன் தன்னை எப்படி நேசிக்கிறாரோ..

அதேபோல தனது அம்மா அப்பாவையும் அவர் நல்ல முறையில் பார்த்துக் கொள்வார் என நினைப்பார்கள் அதை சரியாக செய்து அசத்தி வருகிறார் விக்னேஷ் சிவன். நயன்தாரா உடன் ரொம்ப பாசமாக இருக்கிறார் அதேபோல நயன்தாராவின் அப்பா மற்றும் அம்மாவுடனும் விக்னேஷ் சிவன் ரொம்ப சந்தோஷமாகவும் நன்றாக பார்த்துக் கொள்வதால் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் அதிகமாகிக் கொண்டே போகிறது.

அண்மையில் கூட நயன்தாராவின் அப்பா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன்,நயன்தாரா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததோடு அங்கு கொண்டாடினர் அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் தீயாய் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.