பிரபல நடிகை வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்ட நயன்தாரா.! ஆனால் இவரது ஆசையில் கல்லை தூக்கி போட்ட பிரபல நடிகை.!

லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் மிகவும் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகை தான் நயன்தாரா இவர் தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் களமிறங்கி அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

என்னதான் இவர் மீது பல சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒரு தூசாக எடுத்துக் கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இவர் தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்காக இவர் பல கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

எனவும் தகவல் வைரலாகி வருகிறது மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ரஜினி கதாநாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் இவர் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கனெக்ட் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் தனக்கு இப்படி ஒரு ஆசை இருப்பதாக கூறி உள்ளார் என ஒரு தகவல் கசிந்துள்ளது.

nayanthara
nayantharanayanthara

அதாவது நயன்தாரா ஒரு பேட்டியில் எனக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளாராம். ஆனால் இயக்குனர் ஏல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் ஏற்கனவே தலைவி என்ற திரைப்படத்தில் ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment