ஆண் பிள்ளையை பார்த்த்ததும் அளவுக்கு மீறி சொத்து சேர்க்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன்.! எவ்வளவு தெரியுமா.?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவர் சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் முத்தின மூஞ்சி ஆன்ட்டி மாதிரி இருக்கு என பல விமர்சனங்களை பெற்றார். இவ்வாறு பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் தர்க்கம் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்துள்ளார். பிறகு இருவரும் ஏழு வருடங்கள் காதலித்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிகவும் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணத்தில் பலரும் கலந்து கொண்டு இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள்.

இவ்வாறு நடிகை நயன்தாரா தன்னுடைய திரைப்பயணத்தில் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்துள்ளார் முக்கியமாக திருமணத்திற்கு பிறகும் கூட விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டது பிறகு நான்கே மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டது என பல பிரச்சனைகளில் சிக்கிய இவர் தற்போது அனைத்திலிருந்தும் விலகி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் தென் இந்தியா சினிமாவில் நடிகர்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நடிகையாக திகழ்கிறார் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு 10 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறாராம். இதைத் தவிர பல வியாபாரங்களையும் நயன்தாரா நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது இவருடைய சொத்துக்களை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்க்கும்பொழுது நயன்தாரா தற்பொழுது 165 கோடி அளவிற்கு சொத்து மதிப்பு இருக்கிறதாம். இதனைத் தொடர்ந்து மேலும் ரவுடி பிரிட்ஜ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் விக்னேஷ் உடன் சேர்ந்து நிறுவியுள்ளார் இவ்வாறு இவர்களுடைய இருவருடைய சொத்து மதிப்பும் சேர்த்து பார்த்தால் 250 கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment