பணம் இல்லை என பஞ்ச பாட்டு பாடும் நயன்தாரா.! விக்னேஷ் சிவனுடன் பறப்பதற்கு மட்டும் பல லட்சமா.?

0

nayanthara vignesh sivan flight charge:லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது. இவர் தற்போது அண்ணாத்த, மூக்குத்தி அம்மன் போன்றத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் தனது காதலரான விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. ஆனால் தற்போது அதை கைவிட்டு விட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது இவர் நானும் ரவுடி தான் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தெரியவருகிறது.

நெற்றிக்கண் திரைப்படம் கை விட்டதற்கு காரணம் என்னவென்று கேட்டால் கையில் காசு இல்லை என இருவரும் பஞ்சப்பாட்டு பாடடுகின்றனர். ஆனால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். நயன்தாரா ஒரு படத்துக்கு சம்பளமாக ரூ 5 கோடி வாங்குகிறார். அப்படி இருக்கும் இவர் கையில் பணம் இல்லையா என அனைவரும் கூறி வருகின்றனர்.

மேலும் இவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.  கடந்த வாரம் தான் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துக்காக தனி விமானத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கேரளாவுக்கு சென்றது அனைவரும் அறிந்ததே.

பிரபல தனியார் விமான நிறுவனத்திடம் 40 லட்சம் கொடுத்து கேரளாவிற்கு தனி விமானத்தில் செல்ல பணம் இருக்கிறது. படம் எடுக்க பணமில்லையா என ரசிகர்கள்கேள்வி எழுப்புகின்றனர்.