பில்லா படத்திற்குப் பிறகு நீச்சல் குளத்தில் நயன்தாரா.! அஜித்திற்கு பதில் பக்கத்தில் யார் இருக்கிறார் பார்த்தீர்களா.?

Nayanthara vignesh shivan : பில்லா திரைப்படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் நடந்து வரும் காட்சியை போல் தற்பொழுது நீச்சல் குளத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகிய வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் ரஜினி சூர்யா தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இந்த நிலையில் நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான் அவர்களுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜவான் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்.

நடிகை நயன்தாரா பல காதல் தோல்விக்கு பிறகு நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விக்னேஷ் சிவன் அவர்களுடன் காதல் ஏற்பட்டு பின்பு இருவரும் இருவீட்டார் சமாதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்த நேரம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் இவனுக்கு அதிர்ஷ்டம் கொடுத்து வருகிறது.

Nayanthara vignesh shivan 2
Nayanthara vignesh shivan 2
விடாமுயற்சி படத்தை மிஸ் செய்த விக்னேஷ் சிவன்.?

அதேபோல் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார் ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை விடா முயற்சி திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவனை தூக்கி விட்டார்கள்.

பில்லா படத்தில் நயன்தாரா..

ரஜினி நடிப்பில் வெளியாகிய பில்லா திரைப்படத்தினை மீண்டும் விஷ்ணுவரதன் அஜித்தை வைத்து ரீமேக் செய்தார் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். பில்லா திரைப்படத்தில் நயன்தாரா முதன்முதலாக நீச்சல் உடை அணிந்து நடித்திருந்தார் இந்த காட்சியை இன்னும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள் அந்த அளவு நயன்தாரா நீச்சல் உடையில் மிரட்டி இருப்பார்.

நீச்சல் குளத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன்..

ஜவான் திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நீச்சல் குளத்தில் இறங்கி காத்து வாக்குல காதல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பில்லா படத்தில் அஜித்துடன் நீச்சல் உடைகள் நடித்திருந்தீர்கள் இப்பொழுது நீச்சல் குளத்தில் விக்னேஷ் சிவனுடன் காதல் செய்கிறீர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Nayanthara vignesh shivan
Nayanthara vignesh shivan