சினிமாவை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு களத்தில் இறங்கும் நடிகைகள் எப்போதும் வெற்றியை ருசிப்பார்கள் அந்த வகையில் மலையாள நடிகையான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் முதல் படமே அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் கைகோர்த்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்ததால் இவரது மார்க்கெட் தாறுமாறாக ஏறியது டாப் நடிகர்களுக்கு செலக்சன் ஆக முதலில் நயன்தாராவே பார்க்கப்பட்டார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார்.
மேலும் தென்னிந்திய சினிமாவிலும் பல்வேறு மொழிகளில் நடித்து நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் தொட்ட எல்லாத்திலும் வெற்றி கண்டு வந்த நயன்தாரா நிஜ வாழ்வில் மட்டும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து ஒரு வழியாக அதற்கு தீர்வு காணும் வகையில் விக்னேஷ் சிவனுடன் சில வருடங்களாக காதல் செய்து வருகிறார்.
இருவரும் இணைந்து படங்களைத் தயாரிப்பது பணியாற்றுவது ஆகியவை இருக்கின்றன இது போதாத குறைக்கு மீதி நேரங்களில் இருவரும் இணைந்து ஊர் சுற்றி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர் அண்மையில் கூட இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் ரசிகர்கள் காதல் ஜோடிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம் நீங்களே பாருங்கள்.
