தனுஷ் படத்தால் சிக்கித் தவிக்கும் நயன்தாரா.? என்னடா இது.. தலைவிக்கு வந்த சோதனை.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல்  திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அந்த வகையில் ஆக்ஸிஜன், connect ஆகிய படங்கள் இருக்கின்றன.

இதில் நயன்தாராவின் ஆக்ஸிஜன் அதாவது O2 என இந்த படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது அதே நிறுவனம் தற்போது நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து டாணக்காரன் என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக எடுத்துள்ளது.

இந்த படத்தை வெங்கட்பிரபுவின் உதவி இயக்குனராக இருந்த விக்னேஷ் என்பவர் எடுத்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் தற்பொழுது ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்பொழுது தான் சிக்கலை ஆரம்பித்துள்ளது ஏனென்றால் OTT தளங்கள் டாப் நடிகர்களின் படங்களை முட்டி மோதிக்கொண்டு வாங்குவதையே பெரிய விஷயமாக வைத்திருக்கிறது வாங்கிய உடன் படத்தை ரிலீஸ் செய்கின்றன.

ஆனால் அந்த படம் வெற்றி பெறுமா பெறாத என்பதை ஆராய மாட்டார்கள் அப்படி அண்மையில் வெளிவந்த தனுஷின் மாறன் திரைப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்ததை இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட OTT தளங்கள் படத்தை எந்த நேரத்தில் வெளியிட வேண்டும் எந்த மாதிரியான படம் என்பதை ஆராய ஆரம்பிக்கின்றனர் அந்த வகையில் நயன்தாராவின் O2 படத்திற்கு முன்பாகவே விக்ரம் பிரபு – வின் டாணக்காரன் படம் முதலில் வெளியிட்டுள்ளது.

இன்று இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது இந்த படம் கமர்ஷியல் படம் என்பதால் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என ஹாட்ஸ்டார் கருதி உள்ளது. சூப்பர் ஸ்டார் நயன்தாரா மிகப் பெரிய நடிகையாக இருந்தாலும் அந்த படத்தை அடுத்ததாக ரிலீஸ் செய்யலாம் என ஒதுக்கி வைத்திருக்கிறது அந்த படம் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் சற்று ஆராய்ந்து சரியான நேரத்தில் இறக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தனுஷின் மாறன் திரைப்படம் தான் அந்த படம் மிகப்பெரிய ஒரு டாப் நடிகர் படமென்றாலும் தோல்வியை சந்தித்துள்ளதால் இனி OTT எந்த படமாக இருந்தாலும் சற்று ஆராய்ந்து விட்டு படத்தை வாங்கும். ரிலீஸ் செய்யும் என தெரியவருகிறது.

Leave a Comment