தமிழ் சினிமா உலகில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
மேலும் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ஆக்சிஜன் திரைப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் இல் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களை சென்றடைந்தது. மேலும் நயன்தாரா கனெக்ட், கோல்ட் மற்றும் பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன்..
ஒரு படம் என பல படங்களில் கமிட்டாகி ஒருபக்கம் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் நயன்தாரா இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் சில நாட்களாக வருகின்ற ஜூன் 9ஆம் தேதி.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு திருப்பதியில் திருமணம் என சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் சினிமா பிரபலங்களான கமல், ஏ ஆர் ரகுமான், பூஜை ஹேக்டே போன்ற பலரும் சென்றுள்ளனர்.
ஆனால் இந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்தும் நயன்தாரா அங்கு செல்ல மறுத்து உள்ளாராம். ஏனென்றால் கூடிய விரைவில் நயன்தாராவின் திருமணம் நடைபெற உள்ளதால் கல்யாண வேலைகளில் பிஸியாக இருக்கின்ற காரணத்தினால் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வில்லையாம் இந்த தகவல் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றன.