புதிய விளம்பரத்தில் நடித்த நயன்தாரா – ரசிகர்களை கவர்ந்த வீடியோ.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடைசியாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் எந்த ஒரு திரைப்படமும் வெளியே வராமல் இருந்து வருகின்றன  கடைசியாக கூட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

படம் பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆக்சிஜன், கனெக்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக கனெக்ட் படம் ஒரு திரில்லர் படம் என்பதால் ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் நயன்தாராவுடன் கைகோர்த்து சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. சினிமா உலகில் நடித்து நல்ல காசு பார்த்து வரும் நயன்தாரா அதையும் தாண்டி தனது காதலனுடன் கைகோர்த்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் என்ற பெயரில் படங்களை தயாரித்தும் வருகிறார்.

இதனால் சினிமா உலகில் நல்ல காசை அள்ளி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பல்வேறு கம்பெனிகளில்  இன்வெஸ்ட்மெண்ட் செய்து வருகிறார். நயன்தாராவுக்கு கோடி கணக்கில் வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

இந்த நிலையில் இதையெல்லாம் தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் இப்பொழுது கூட நடிகை நயன்தாரா லிப்ஸ்டிக் விளம்பரம்  ஒன்றிருக்க தனது அழகை காட்டி இவர் நடித்த வீடியோ இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் நயன்தாராவின் லிப்ஸ்டிக் விளம்பரத்தை..

Leave a Comment