ஒரு படத்திற்கு நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா.? இதோ சுவாரஸ்யமான தகவல்

0
nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா, இவரை அனைவரும் லேடி சூப்பர்ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். நயன்தாரா நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு  திரைக்கு வர இருக்கிறது, இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா, இந்த நிலையில் ரஜினி ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா ஒரு படத்திற்கு இரண்டாம் கட்ட ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை வாங்கி வருகிறாராம் என்ற தகவல் கிடைத்துள்ளன.

ஆம் அதாவது நயன்தாரா ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என பிரபல வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. நயன்தாராவின் மார்க்கெட் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.