நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி நடிக்கும் “காத்து வாக்குல இரண்டு காதல்” – படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் – வியப்பில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் தயாரிப்பாளராக விஸ்வரூபம் எடுத்துள்ள அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். படங்களை விக்னேஷ் மட்டும் தயாரிக்காமல் தனது காதலி நயன்தாராவை இணைத்து தற்போது பல்வேறு திரைப்படங்களை இவர்கள் இருவரும் சேர்ந்து தயாரித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விக்னேஸ்வரன் படங்களில் பாட்டு எழுதுவது மற்றும் படங்களை தயாரிப்பது மாக இருந்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது இந்த படத்தில் நாம் எப்படி விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா ஆகியோர்களை எதிர்பார்க்கிறோமோ அவர்களை விட முக்கியமான ஒரு பிரபலம் இந்த படத்தில் நடித்து உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த பிரபலம் வேறு யாருமல்ல  ஆம் கிரிக்கெட் வீரரும் நடிகருமான கேரளாவைச் சார்ந்த ஸ்ரீசாந்த் தான். சமீபகாலமாக இவர் ஹிந்தி மற்றும் பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது  குறிபிடத்தக்கது. இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் இப்போதைக்கு அது குறித்து தன்னால் பேச முடியாது என சொல்லி உள்ளார்.

sree santh
sree santh

ஸ்ரீசாந்த் இதனால் இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது இன்னும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

Leave a Comment