ரஜினியின் அண்ணாத்த திரைப் படத்தில் நயன்தாரா வாங்கும் சம்பளம் இத்தனை கோடி தானா.! பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்.!

தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர் இவரை அனைவரும் லேடி சூப்பர்ஸ்டார் என்றுதான் அழைத்து வருகிறார்கள், இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

அதனால் பல தயாரிப்பாளர்கள் இவர் எவ்வளவு கோடி பணம் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள், கடைசியாக இவர் ரஜினியின் தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதற்கு சம்பளமாக 5.5 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.

இப்பொழுது மீண்டும் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் இணைந்துள்ளார், இந்த திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது இத்திரைப்படத்தில் மீனா குஷ்பூ சதீஷ் சூரி கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கு சம்பளமாக 4.5 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது என பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் தெரிவித்துள்ளார். எது எப்படியோ ஆனாலும் நயன்தாரா காட்டில் மழைதான்.

Leave a Comment