படத்திற்காக முன்னாள் காதலருடன் ஓடும் நயன்தாரா.! ஐயோ போச்சே..போச்சே..என தலையில் அடித்துக் கொள்ளும் விக்னேஷ் சிவன்.

Nayanthara running with ex-boyfriend for the movie.! director Vignesh Shivan got fear : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவரது ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவை காதலித்தார். அவரைத் தொடர்ந்து பின்னர் நடிகரும் மற்றும் நடன இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்தார்.

மேலும் அந்த காதலும் முடிவடைந்த நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அவருடன் லிவிங் டு கெதரில் இருந்து வருகிறார். என்னதான் இவர் சர்ச்சையில் அதிகம் மாட்டிக்கொண்டு இருந்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது வளர்ச்சியினை நோக்கி சென்று கொண்டுள்ளார் என்பதை அனைவரும் அறிந்ததே.

மேலும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற திரைப்படத்தில் கார்த்தி மற்றும் விஷால் நடிப்பதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கார்த்திக்கும் விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கார்த்திக்கை மட்டும் வைத்து எடுக்க இயக்குனர் பிரபுதேவா முடிவு செய்துள்ளாராம். மேலும் இத்திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டாராம்.

மீண்டும் பிரபுதேவா படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ஒப்புக்கொண்டதை பிரபல பத்திரிக்கையாளர் டிஸ்னி தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். எனவே இதை அறிந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் எங்க நயன்தாரா மறுபடியும் பிரபுதேவாவுடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இருக்கிறாராம். அதனால் எப்படியாவது இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க விடாமல் முட்டுக்கட்டை போடுவார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

 

 

Leave a Comment