போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நயன்தாராவின் வீட்டைப் பார்த்து உள்ளீர்களா.? பல கோடி வரும்

Nayanthara pose  Garden house : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் சரத்குமாரின் ஐயா படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு  ரஜினியுடன் சந்திரமுகி, அஜித்துடன் பில்லா, விஜய் உடன் வில்லு, சிவகார்த்திகேயன் உடன் வேலைக்காரன்..

விஜய் சேதுபதி உடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என டாப் நடிகர்களுடன் படம் பண்ணி தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார். இப்பவும் டாப் ஹீரோ மற்றும் சோலோ படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இதனால் அவரது மார்க்கெட் குறையவே இல்லை.. இந்த நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயின்னாக நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டில்  நடிக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. ஜவான்  படத்தை  தொடர்ந்து நயன்தாரா கைவசம்  இறைவன், நயன்தாரா 75, டெஸ்ட்  ஆகிய திரைப்படங்களில் நடித்த வருகிறார்..

திரை உலகில் நடிப்பதையும் தாண்டி  தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் இதனால் நயன்தாராவுக்கு நாலு பக்கமும் காசுகள் குவிந்த வண்ணமே இருக்கிறது நயன்தாரா சென்னையும் தாண்டி பல முக்கிய இடங்களில் வீடு உங்களை வாங்கி வைத்திருக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிந்தது தான்.

Nayanthara
Nayanthara

அந்த வகையில் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் வீடு ஒன்றை வாங்கினார் என நாம் கூறி இருந்தோம் இந்த நிலையில் அந்த வீடு குறித்து  ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் அந்த வீடு நான்கு அடுக்குமாடிகளை கொண்டது பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம் இந்த நிலையில் அதன் புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Nayanthara pose house
Nayanthara pose house