அட நல்லா உத்துப் பாருங்க அது நம்ம நயன்தாரா தான்.! புகைப்படத்தை பார்த்து ஜர்க் ஆகும் ரசிகர்கள்

0

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல எதிர்ப்புகளையும், கேலிகளையும் தாண்டி தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.

இவர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானா. இவர் முதலில் மலையாளத் திரைப்படத்தில் தான் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் ஐயா திரைப்படத்தை தொடர்ந்து சந்திரமுகி, கஜினி,சிவகாசி, வில்லு பில்லா போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தான் மற்ற நடிகைகளை விடவும் தமிழில் முன்னணி நடிகர்கள் வாங்கும் அளவிற்கு சம்பளம் வாங்குகிறார். இவ்வாறு சோலோ ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக உள்ளது. இவர் தற்பொழுது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாலும் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கொஞ்சம் ஆன்ட்டி மாறி தான் இருந்தார்.  இதனால் இவரை பலரும் கிண்டல் செய்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை அதன்பிறகு இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது.

அந்தவகையில் நயன்தாரா அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் மட்டும் நடித்து வருகிறார். மற்ற நடிகைகள் கூட தமிழில் பிரபலமடைந்து விட்டு தெலுங்கு,மலையாளம் போன்ற மற்ற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆனால் நயன்தாரா இருக்குமிடத்தில் ராணியாக இருந்தால் போதும் என்று தமிழ் மட்டும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.