நயன்தாரா நடிக்கும் நிழல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…!!

nayanthara nizhal movie first look poster: தனது முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று பல ரசிகர்களை தன்வசப்படுத்தி கொண்டவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமே பெரிதும் கவனம் செலுத்தி வந்து கொண்டிருந்தார்

ஆனால் தற்போது அதனை மாற்றிக் கொண்டு தெலுங்கு ,மலையாள மொழிகளில் என இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். நயன்தாரா தற்போது  தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், அண்ணாத்த, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் அதுமட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படத்தில் மிக சவாலான கதாபாத்திரமாக இருக்கும் எனவும் இவர்தான் லீடிங் ரோலில் நடிக்கிறார் எனவும் பேசப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது இவர் மலையாளத்தில் நிழல் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கேரளாவை சேர்ந்த நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் Appu N Bhattathiri என்பவர் இயக்கியிருக்கிறார்.

 

Leave a Comment