அட்டை படத்திற்காக கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா.!! வைரலாகும் புகைப்படம்.

0

nayanthara new look photo: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குழந்தை நடிப்பின் மூலம் கடந்த 15 வருடங்களாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தனி ஒருவராக பெண்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனது சினிமா கேரியரில் கொஞ்சம் கூட சருக்கு இல்லாமல் கவனமாக படத்தை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நயன்தாரா தற்போது தமிழில் அண்ணாத்த மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் போன்ற சில திரைப்படங்களும் எனவும் தெரிய வருகிறது. சினிமாவுலகில் எப்போதும் பிஸியாக இருக்கும் நயன்தாரா கிடைக்கும் சில நேரங்களை தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் செலவிட்டு சந்தோஷப்படுகிறார்.

மேலும் இவர்களது திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் விரைவில் திருமணம் நடக்கும் எனவும் கூறியுள்ளனர். இந்த கொரோனா ஊரடங்கு முடிந்ததும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு கோவாவிற்கு சென்றிருந்தனர். பின்னர் தனி விமானத்தில் சென்னைக்கு வந்து இறங்கினர்.

கொரோனா ஊரடங்கு முடிந்து படப்பிடிப்புகள் துவங்கப்பட்ட நிலையில் தற்போது தனது கவனத்தை சினிமாவில் செலுத்தியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை புத்தகத்தின் அட்டைப் படத்திற்காக வெளியிட்டுள்ளார். வயதானாலும் இன்னும் கவர்ச்சி கொஞ்சம் கூட குறையவே இல்லை என ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nayantharaaa
nayantharaaa