கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் விளம்பரங்களிலும் நடித்து காசு பார்க்கும் நயன்தாரா.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா, இவர் ரஜினி, அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார். தற்போது இரண்டாம் கட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

அதேபோல் இதற்கு முன் சில மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன்பின் இவர் நடித்த தமிழ் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மூக்குத்தி அம்மன், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர், இவர் முன்பு பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்நிலையில் தற்பொழுது மிக அழகான உடையில் புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment