லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படைத்த புதிய சாதனை.! இந்த முறை வேற லெவல்

வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என்றல் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும் நயன்தாரா  நடிப்பு திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த  மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT வழியாக ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனமும் கிடைத்தது.

இதனை அடுத்து இவரது நெற்றிக்கண் படத்தை மிகுந்த ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.

நெற்றிக்கண் படத்தை இவரது காதலனான விக்னேஸ்சிவன்  தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டீசர் வெளியான போது தற்போதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த  தகவல் நயன்தாராவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment