பிரமாண்டத்திலும் பிரமாண்டம் மூக்குத்தி அம்மன் கிளைமேக்ஸில் இப்படி ஒரு பிரமாண்டமா.!

mukuthiamman movie climax secret reveal: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு  ஓடிடித்தளத்தில் ரிலீசாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சாமி திரைப்படம் என குறிப்பிட்டிருந்தனர் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நயன்தாராவிற்கு அம்மன் வேஷம் மிக பொருத்தமாக இருந்தது எனவும் கூறியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் சாமியின் பெயரை கூறி ஏமாற்றுபவர்களை தாக்கி படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் 7500 துணை நடிகர்களை கொண்டு மிக சவாலாக எடுக்கப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் 7500 பேரைக்கொண்டு ஒரே நாளில் அந்த கிளைமாக்ஸ் காட்சி எடுத்து முடிக்கப்பட்டதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment