லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

0

nayanthara mukuthi amman movie release date announced: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். மேலும் இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி, ஸ்ருமிதி வெங்கட், ஊர்வசி, அஜய் ஜோஸ், இந்துஜா ரவிசந்திரன் போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

மேலும் இத்திரைப்படத்திற்கு க்ரிஷ் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாக உள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாக ரெடியாக உள்ளதால் கொரோனா ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள்  திறக்கப்பட்ட உடனேயே தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  இன்னும்  திறக்காததால் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது.

மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாவதாக செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து ஆர் ஜே பாலாஜி அவர்களின் டுவிட் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் ஹாட்ஸ்டாரில் தீபாவளி அன்று வெளியாகும் என இத்திரைபடத்தின் போஸ்டர் ஒன்று இணைய தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

எனவே வருகின்ற தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் ரசிகர்கள் வீட்டில் இருந்துகொண்டே மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை பார்க்கலாம் என கூறப்படுகிறது.