நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஜீவா படத்தின் காட்சி.! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

0

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இவர் தற்போது மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டார் இல் வெளியானது.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் அப்படத்தில் இந்துஜா, ஊர்வசி, மவுலி என பலரும் நடித்துள்ளார்கள், இந்த படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் கூட இருந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை வெல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது, படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து மிரட்டினார், ஆனால் நயன்தாரா நடித்தது பலருக்கு பிடிக்காமல் நயன்தாராவை அம்மானா என கேலி செய்தார்கள் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கட்சிதமாக நடித்திரந்தார்.

படத்தில் சாமி பெயர்களை சொல்லி ஏமாற்றும் போலி சாமியார்களையும், சாமி நம்பிக்கையால் ஏமாறும் மக்கள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த திரைபபடம் உருவாக்கப்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் இருந்து சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது இதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மூக்குத்தி அம்மா நடிகை நயன்தாரா தோன்றுவார் அப்பொழுது போலி சாமியாராக வில்லன் நடிகர் முன் இந்த காட்சி நடைபெறும்.. மூக்குத்தி அம்மன் நயன்தாரா டிவி மற்றும் சிசிடிவி காட்சியில் அனைவரும் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக மேஜிக் செய்வார்.

அதன்பிறகுதான் அனைத்து டிவி மற்றும் சிசிடிவி காட்சிகளில் நயன்தாரா உருவம் தோன்றும் அதனை அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அப்பொழுது ஒரு சின்ன வீட்டிற்குள் சட்டை போடாத நபர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது டிவி பார்ப்பார்.

இந்த காட்சி தான் இதற்கு முன்பு ஜீவா நடிப்பில் வெளியாகிய சிறு திரைப்படத்திலும் இடம் பெற்றிருக்கும், இதைப்பார்த்த ரசிகர்கள் சிறு திரைப்படத்தின் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் எடிட்டர் ஆர் கே செல்வா இப்படி இரண்டு பேரும் வெவ்வேறு ஆளாக இருக்கும் பொழுது இந்த காட்சி எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.