தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் இணைந்து நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணியாற்றும் பொழுது இவர்கள் இடையே நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறியுள்ளது.அந்த வகையில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் தற்பொழுது ட்ரெண்டிங்கான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் விக்னேஷ் சிவன் இயக்குவது மற்றும் தயாரிப்பது போன்றவற்றை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நெற்றிக்கண் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளார்கள் இந்த திரைப்படத்தில் நயன்தாரா கண் தெரியாத பெண் வேடத்தில் நடித்துள்ளார் அதோடு இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
அதன் பிறகு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்கள். அதோடு பி.ஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தையும் நயன்தாராதான் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் தான் தொடர்ந்து ஏராளமான விருதுகளை வென்று வருகிறது.
அந்த வகையில் சர்வதேச பட விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்று வரும் நிலையில் முதலில் அவர் நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் இத்திரைப்படம் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. இதனை தொடர்ந்து கூழங்கல் திரைப்படம் நியூயார்க்கில் நடந்த டைரக்டர் நியூ திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வாங்கியது.

அதன் பிறகு இத்தாலியில் நடந்த சார்ட்ஸ் தர் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. நயன்தாராவின் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் தொடர்ந்து விருதுகளை பெற்ற நயன்தாராவின் திரை வாழ்க்கைக்கான ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
நயன்தாரா இந்த அளவிற்கு தனது சிறந்த திறமையை வளர்ந்திருந்தாலும் இதற்கு முக்கிய காரணம் விக்னேஷ் சிவன் என்று தான் கூற வேண்டும் என்று கோலிவுட் வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.