இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இணைந்த இயக்குனர்

நயன்தாரா திருமணம் ஆன பிறகும் கூட தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அதை அடுத்து பிசினஸ் குழந்தைகள் என அவருடைய நேரம் ரெக்கை கட்டி பறக்கிறது.

இருந்தாலும் கூட அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது கை நிறைய படங்களை வைத்திருக்கும் இவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

அதையடுத்து சமீபத்தில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. முதல் பாகத்தை தயாரித்த ஐசரி கணேஷ் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். ஆனால் இந்த முறை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி கிடையாது.

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தான் இருந்தாலும் வேற ஏதாவது சர்ப்ரைஸ் இருக்கும் என எதிர்பார்த்தனர். அதேபோல் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குனர் சுந்தர் சி என தெரியவந்துள்ளது. அதற்கான போஸ்டரை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

காமெடி, பேய் படங்கள் என சுந்தர் சி கடந்த சில வருடங்களாக தனி டிராக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை தற்போது சாமி படத்திற்குள் இழுத்துப் போட்டு இருக்கிறார் ஐசரி கணேஷ். ஒருவேளை இதுவும் திகில் கலந்த சாமி படமாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட இருக்கிறது.

அடுத்தடுத்த அப்டேட் மூலம் இதை நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் நயன்தாரா சுந்தர் சி இருவரின் கூட்டணி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. முந்தைய பாகத்தை போலவே இந்த படமும் வெற்றியடைய வேண்டும் என்ற வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.