தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார் இவர்கள் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் அடிக்கடி படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெக்கேஷன் காக வெளிநாடுகளுக்குச் சென்று மிகவும் ஹேப்பியாக இருந்துள்ளார்கள் அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியது .
இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சமீபகாலமாக கோயில் கோயிலாக சென்று பூஜை செய்து வருகிறார்கள் அதற்கு காரணம் பலரும் இவர்கள் திருமணம் விரைவில் நடக்க போவது என பலரும் தெரிவித்து வந்தார்கள் இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகிய காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி சமந்தா ஆகியோர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சங்களை பெற்றது.
ஆனால் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வசூல் வேட்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இவர்களின் திருமணம் எளிமையாக நடக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஹனிமூனுக்காக வெளிநாடு செல்வார்கள் என பலரும் கூறினார்கள் ஆனால் ஹனிமூன் இப்போதைக்கு வேண்டாம் என நயன்தாரா அதிரடியாக முடிவு எடுத்துள்ளார் அதனால் திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் கேரளா செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கேரளா சென்று புத்துணர்ச்சியாக சில ஆயுர்வேத சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் விக்னேஷ் சிவன் அஜித் 62 திரைப்படத்திற்கான வேலைகளை கேரளா வில் முடிப்பதற்காக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் நயன்தாராவின் புத்துணர்ச்சி சிகிச்சை முடிந்தவுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்ல இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஹனிமூன் முடிந்தவுடன் அஜித் 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை விக்னேஷ் சிவன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணதிற்கு பிறகு நடிக்க மாட்டார் என இளம் நடிகைகள் எதிர் பார்த்தார்கள் ஆனால் திருமணதிற்கு பிறகும் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதனால் இளம் நடிகைகள் கொஞ்சம் கலகத்தில் இருக்கிறார்கள்.