உடல் மெலிந்து இளம் நடிகைகளை போல் நயன்தாரா.! இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் பல நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகை தான் நயன்தாரா இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

முதலில் நெற்றிக்கண் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது அதனை தொடர்ந்து நயன்தாரா ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் மற்றும் இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீப காலமாகவே நயந்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிகவேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் அதே போல் தற்போதும் அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

நயன்தாரா தனது உடல் எடையை சுத்தமாக குறைத்து பார்ப்பதற்கு ஒரு காலேஜ் பெண் போல் தெரிகிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன நயன்தாரா இப்படி ஆயிட்டீங்க என கிண்டல் செய்வது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இவரின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara

Leave a Comment