லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா இவர் கடந்த வருடம் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன அதே போல் கடந்த வருடத்தில் நயன்தாரா பல சர்ச்சைகளையும் சந்தித்தார். அதில் ஒன்றுதான் அவருக்குப் பிறந்த இரட்டை குழந்தை சர்ச்சை.
நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் நீண்ட வருடம் காதலித்து வந்ததால் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார் என பலரும் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென தங்களுடைய திருமண தேதியை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அதன் பிறகு நான்கு மாதம் ஆன நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தார் ஆனால் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் திருமணத்திற்கு முன்பே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது இருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய கனெக்ட் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை இந்த நிலையில் எப்படியாவது மீண்டும் நல்ல வெற்றி திரைப்படத்தை கொடுத்து விட வேண்டும் என முடிவில் இருக்கிறார் நயன்தாரா அதே போல் விக்னேஷ் சிவன் அஜித்தின் திரைப்படத்தை இயக்குவதற்கு ரெடியாகிவிட்டார்.

இருவரும் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருவார்கள் அந்த வகையில் இவர்கள் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி இருக்கும் வகையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நயன்தாரா தன்னுடைய இரண்டு மகன்களையும் கையில் ஏந்தியவாறு விக்னேஷ் சிவன் நெற்றியில் முத்தத்தை பதித்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.
