தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவர் நயன்தாரா, இவர் இன்றைய நடிகர்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் சம்பளம் வாங்குபவர், ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிரபுதேவா சிம்பு ஆகியவர்களின் காதல் வலையில் சிக்கி பின்பு பல பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்தவர்.
தற்போது தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக வலம் வருகிறார், இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார், இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.
அதேபோல் ஹீரோவுக்கு இணையாக கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர், தற்பொழுது இவருக்கு விஜய்யுடன் நடித்துள்ள பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இதனைதொடர்ந்து அடுத்ததாக ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா புடவை கட்டிக்கொண்டு அணிகலன்களை அணிந்து கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் இந்த புகைபடத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

