பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் நயன்தாரா – யாருடன் தெரியுமா.? சந்தோஷத்தின் உச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தமிழில் முன்னணி ஹீரோக்களான ரஜினி, அஜீத், விஜய், சிம்பு, சூர்யா போன்ற நட்சத்திரப் பட்டாளங்கள் உடன் ஜோடி போட்டு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா. மேலும் தமிழில் இவரது வளர்ச்சியின் காரணமாகவே  லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்றுள்ளார்.

இப்படி சினிமா வாழ்க்கையில் சிறப்பாக ஜொலித்து வரும் நயன்தாரா மற்றும்  இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஊர்சுற்றி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்கள். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றன.

மேலும் இதில் பல்வேறு திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் கடைசியாக இவர்களது தயாரிப்பில் ராக்கி என்ற திரைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது தமிழில் தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

மேலும் இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து மற்றொரு முன்னணி நடிகையான சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடித்து வருகின்றனர்.  அண்மையில் கூட இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. நயன்தாரா இந்த படத்தை தொடர்ந்து தமிழில் கனெக்ட் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் தற்போது தமிழை தாண்டி பாலிவுட் திரை உலகிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா.

அந்த வகையில் முதலில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மோகன் ராஜாவுடன் மீண்டும் இணைய உள்ளார் நயன்தாரா. லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தற்போது மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த முதன்மை கதாபாத்திரத்தில் தெலுங்கில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. அந்தவகையில் படப்பிடிப்பின்போது மோகன்ராஜா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.