நயன்தாராவை ஒரேடியாக ஓரம் கட்டும் இளம் நடிகை.! அதுவும் கையில் ஒரு டஜன் திரைப்படமா..

0
nayanthara-23
nayanthara-23

தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தற்பொழுது ஹீரோக்களுக்கு நிகராக சினிமாவில் கலக்கி வரும் ஒரே நடிகையாக இருந்து வருகிறார். நயன்தாரா கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் இவர் பல எதிர்பாராத விமர்சனங்களை பெற்றாலும் கூட அதனை எல்லாம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய வெற்றியை கண்டு வருகிறார்.

மேலும் இவர் மட்டும்தான் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை ஏழு வருடங்களாக காதலித்து கரம் பிடித்தார். மேலும் வாடகத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தன்னுடைய திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர்கள் ஹீரோவாக நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளது.

பொதுவாக நடிகைகள் என்றாலே திருமணத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற மாட்டார்கள் அதேபோல் நடிகை நயன்தாராவும் புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமானது போல் எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை ஆனால் இந்த நேரத்தில் சமந்தா, த்ரிஷா இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் அடுத்தது நயன்தாராவின் இடத்தை யார் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் நடிகைகள் சமந்தா, திரிஷா இவர்களை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தான் தற்போது நயன்தாராவின் இடத்தை பிடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருந்து வருகிறது.

அதாவது தற்பொழுது நயன்தாரா அளவிற்கு மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் திகழ்கிறார். அந்த வகையில் டிரைவர் ஜமுனா, தீயவர் கொலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன் என அடுத்தடுத்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்தது போன்ற திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும் கதாநாயகர்களுக்கு ஜோடி போடும் கேரக்டர்கள் எல்லாம் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் 15 படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. கிட்டதட்ட இரண்டரை வருடங்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ்யிடம் கால்ஷீட் இல்லையாம் எனவே இதற்கு மேல் எந்த ஒரு தயாரிப்பாளரும் ஐஸ்வர்யாவை சந்திக்க தேவையில்லை.