நயன்தாரா பேருக்கு முன்னாடி லேடி சூப்பர் ஸ்டாரா.? அப்போ நான் நடிக்கவே மாட்டேன் என பட வாய்ப்பு தூக்கி எறிந்த முன்னணி நடிகை.! அதன் பிறகு யார் நடித்தார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா மற்றும் திரிஷா நடிகை நயன்தாரா பல திரைப்படங்களில் நடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார் அது மட்டும் இல்லாமல் ஆரம்ப காலகட்டத்தில் நயன்தாரா பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் போகப்போக தன்னுடைய பட வாய்ப்பு தக்க வைத்துக் கொண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து நிலை நாட்ட ஆரம்பித்தார்.

பிறகு போகப்போக சோலோவாக நடித்து பல திரைப்படங்களில் வெற்றியும் கொடுத்துள்ளார் அதன் விளைவாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் அடைந்தார் தற்பொழுது முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர் அதேபோல் நடிகர் திரிஷா ஆரம்ப காலகட்டத்தில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் ஆனால் போகப் போக அவருக்கு பெரிதாக மார்க்கெட் அமையவில்லை.

இந்த நிலையில்  சமீபத்தில் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் இன்னும் இருப்பதை நிரூபிக்கும் வகையில்  அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். அப்படி இருக்கும் வகையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கும் வகையில் திரிஷாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது.

அதேபோல் நயன்தாராவும் திரிஷாவும் இணைந்து நடித்ததே கிடையாது ஆனால் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு ஒன்று கிடைத்தது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகை திரிஷா தான். அதாவது சமந்தா கதாபாத்திரத்தில் திரிஷாவை தான் முதலில் நடிக்க அணுகி உள்ளார்கள் ஆனால் நயன்தாராவால் தான் அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு கை மீறி போனது.

ஏனென்றால் படத்தின் துவக்கத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று விக்னேஷ் சிவன் போடுவார் ஆனால் திரிஷா அப்படி லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவுக்கு போட்டால் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய மதிப்பு மிகவும் குறையும் என எண்ணி லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவுக்கு போடாமல் இருந்தால் நான் இந்த திரைப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால்தான் திரிஷாவுக்கு பதில் சமந்தாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்கள் இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment