லேடி சூப்பர் ஸ்டார் கையில் விருது விக்னேஷ் சிவன் கைக்குள் நயன்தாரா – மாஸ் காட்டும் ஜோடி.! வைரலாகும் புகைப்படம்.

nayanthara-and-vignesh
nayanthara-and-vignesh-333

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்தி இருக்கும் நடிகை நயன்தாரா தற்போது டாப் நடிகரின் படங்களை கைப்பற்றி நடித்து வருவதால் அவரது இடத்தை பிடிக்க முடியாமல் பலரும் தட்டுத் தடுமாறி வருகின்றனர் இது ஒருபக்கம் இருக்க தற்போது தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளதால் அவரைப் பார்த்து பல நடிகைகள் பொறாமை படுகின்றனர்.

நடிகை நயன்தாரா இவ்வாறு செய்ய முக்கிய காரணம் அவரது காதலன் விக்னேஷ் சிவன் என கூறப்படுகிறது காதலன் விக்னேஷ் இருவரும் இணைந்துதான் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

சினிமா நேரம்போக ஊர் சுற்றிக் கொண்டு இருந்த இவர்கள் தற்போது இந்த நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை எடுத்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளனர்.

இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல அவார்டுகளை குவித்து வருகிறது அந்த வகையில் சர்வதேச அளவிலான டைகர் அவார்டு தற்போது இந்த திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது அந்த விருதுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

சும்மாவே இந்த ரெண்டு ஜோடிகளும் செம மாஸ் காட்டுவார்கள் தற்போது விருதுடன் இருப்பதால் நயன்தாரா ரசிகர்கள் தற்போது செம்ம உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nayanthara-and-vignesh
nayanthara-and-vignesh