தமிழ்சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிம்பு இவர் ஆரம்பத்தில் நல்ல நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதன் பிறகு இவருடைய அலட்சிய தன்மை மூலமாக ஏகப்பட்ட பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்தார்.
இதன் காரணமாக வெகுகாலமாக திரைப்படம் நடிக்காமல் இருந்த வந்த நடிகர் சிம்பு அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு மீண்டும் பழைய நிலைக்கு மாறி உள்ளார். இவ்வாறு சிம்பு பழைய நிலையை அடைந்த பிறகு வெறும் 30 நாட்களில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை நடித்து வெளியிட்டார்கள்.
ஆனால் இத்திரைப்படம் சொல்லும்படி நடிகர் சிம்பு க்கு ஹிட் கொடுக்கவில்லை அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கி வருகிறது.
இவ்வாறு இந்த மாநாடு திரைப்படம் உருவான நாளிலிருந்தே இதில் நயன்தாராவின் நினைவுகள் அடிக்கடி சம்பந்தம் உள்ளது போல் இருக்கிறது என ரசிகர்கள் பல கேள்விகளை முன் வைத்துள்ளார்கள் அந்த வகையில் மாநாடு இசை வெளியீட்டு விழா நயன்தாராவின் பிறந்த நாளன்று வெளியாகின.
அதுமட்டுமில்லாமல் சிம்பு அப்பொழுது அமர்ந்திருந்தது கூட ஒன்பதாம் நம்பர் சேரில் தான் அமர்ந்திருந்தார் இது போதாதென்று மாநாடு திரைப்படத்தில் ஒரு காட்சியில் சிம்பு மற்றும் கல்யாணி இருவரின்பென்சில் ஓவியம் இடம்பெற்றிருக்கும் அதிலிருக்கும் ஹீரோயின் புகைப்படத்தை பார்த்தால் அப்படியே நயன்தாரா போல இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் அந்த உருவத்தில் நயன்தாரா இருப்பது போல் மற்றும் இருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்பட காட்சி ஒன்றில் வில்லன் இருக்கும் அறையின் நம்பர் கூட 414 தான் இவற்றை கூட்டினால் ஒன்பது வருவது மட்டுமில்லாமல் படத்தின் ஒரு இடத்தில் மூக்குத்தி அம்மன் துணை என காண்பிக்கப்படும் இது நயன்தாராவின் திரைப்படத்தை குறிக்கிறது.

இதனால் சிம்பு இன்னும் நயன்தாராவை மறக்கவில்லை என ரசிகர்கள் கூறிவருவது மட்டுமில்லாமல் அதற்கு தகுந்தார்போல் தான் இவருடைய வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளும் நடந்து வருகிறது.