தலை நிறைய மல்லிகை பூ வைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் புடவையில் நயன்தாரா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

0

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவரை தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள், மேலும் நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய், அஜித், விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் நயன்தாரா, என்னதான் இப்பொழுது நயன்தாரா முன்னணி ஸ்டாராக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தது அதிலிருந்து மீண்டு வந்தவர்.

மேலும் நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், கடைசியாக ரஜினிகாந்தின் தர்பார் திரை படத்தில் நடித்திருந்தார், நயன்தாரா சிம்பு, பிரபுதேவாவை காதலித்தார் என்பது ஊரறிந்த விஷயம், ஆனால் இவர்களை தற்பொழுது தனது மனதிலிருந்து முழுமையாக நீக்கி விட்டார்.

இப்பொழுது தன்னுடைய மனதில் விக்கியை வைத்துள்ளார், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதலை ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள், இவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில இருக்கிறார்கள் என்பதை இவர்களே அடிக்கடி ஊர் சுற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்து விடுவார்கள்.

இந்த ஊர் அடங்கில் கூட பிரதமர் மோடிக்கு எதிராக பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆதரவாக வீட்டு வாசலில் நின்று கைகளைத் தட்ட சொன்ன பொழுது கூட இருவரும் இணைந்து ஒருவர் கை மீது ஒருவர் கை படும்படி தட்டி ரொமான்ஸ் செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டு வாசலில் விளக்கு ஏற்ற சொன்ன பொழுது கூட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மெழுகுவர்த்தி ஏற்றினார்கள் அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

nayanthara-tamil360newz 2
nayanthara-tamil360newz 2

அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் நயன்தாரா நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்திருந்தார் அந்த புகைப்படம் பெரிய அளவில் வைரல் ஆனது, இந்த நிலையில் நயன்தாரா புடவையில் செம க்யூட்டாக மல்லிகைபூ வைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் நடந்துவரும் புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவை மாடர்ன் உடையில் பார்த்து விட்டு இப்படிப் பார்க்கும்போது இன்னும் அழகாக தெரிகிறார் என கருத்து தெரிவித்து வருகிறார்கள், இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் தற்போது வைரலாகி வருகிறது.

nayanthara-tamil360newz
nayanthara-tamil360newz