ஷாருக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகவில்லையாம் – அவருடைய கதாபாத்திரம் ரெடி.!

0
sharukhan-and-nayanthara
sharukhan-and-nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் சோலோ கதாபாத்திரங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருவதால் தொடர்ந்து வெற்றியை ருசித்து வருகிறார்.

அந்த காரணத்தினால் இன்றும் இவர் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து வந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திடீரென ஹிந்தி பக்கம் சென்று உள்ளார். இயக்குனர் அட்லி ஷாருக்கானுக்கு ஒரு கதையை சொல்லி கமிட் ஆகியுள்ளார்.

அந்த திரைப்படத்தை தற்போது லயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரம் அவருக்கு உள்ளது மேலும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் நயன்தாராவும் இந்த படத்தில் ஷாருக்கான்னுக்கு ஜோடியாக கமிட்டாகி இருந்தார்.

இந்த படத்தின் இடையில் ஷாருக்கான் தனது மகன் பிரச்சினையின் காரணமாக ஷூட்டிங்கில் இருந்து உடனடியாக வெளியேறுவதோடு மட்டுமல்லாமல் மீண்டுவர சில காலங்கள் ஆகும் என கூறினார் ஆனால் நயன்தாராவோ தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் ஷாருக்கான் இணைவதற்கு லேட் ஆனால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்பதால் இந்த படத்தில் இருந்து அவர் விலகியதாக அண்மையில் செய்திகள் தீயாய் பரவி வந்த நிலையில் அது உண்மை இல்லை என கூறப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் அயன் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட கன்ஃபார்ம் உள்ளதாக கூறப்படுகிறது மேலும் அவரது கதாபாத்திரம் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், ஷாருக்கானின் காதலியாகவும் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளன.