சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கும் நயன்தாரா!! இயக்குனர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

0
csk14
csk14

nayanthara: நயன்தாரா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் பிரமஷன் நாளை சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடக்கும் போது அதற்கிடையே ஹாட்ஸ்டாரில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக இயக்குனர் ஆர்ஜே பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் பெறாவிட்டாலும் அந்த அணியின் ரசிகர்கள் அடுத்தடுத்து வரவிருக்கும் போட்டிகளை தொடர்ந்து பார்ப்பார்கள்.

மேலும் நாளை வெளியாக இருக்கும் இந்த ட்ரெய்லர் சிஎஸ்கே மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.