இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக வெட்கப்படும் நயன்தாரா.!!

0

nayanthara feeling bad acting in this movie: தற்போது சினிமாவில் 15 வருடங்களை கடந்து தனது சிறந்த நடிப்பின் மூலம் தற்போது நிறைய படங்களில் நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கென ஒரு ஸ்டைலில் இருப்பாரோ.

அவரை போலவே நயன்தாராவும் தனக்கென ஒரு ஸ்டைல், லுக், ஆடை அலங்காரம், அனைத்திலுமே மற்ற நடிகைகளை விட வித்தியாசமாக இருந்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இதனாலேயே நடிகை நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் பட்டம் அளித்தனர்.

தற்போது நடிகை நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

நடிகை நயன்தாரா சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராம் அந்த அளவிற்கு பயன்படுத்த மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. நயன்தாரா எப்போதுமே கோவிலுக்கு செல்வது, சுற்றுப் பயணம் செல்வது, விக்னேஷ் சிவனுடன் நேரம் செலவிடுவது போன்றவற்றையே செய்வார்.

நடிகை நயன்தாரா கதையை கேட்காமலேயே கொலையுதிர் காலம் என்ற திரைப்படத்தில் நடித்ததாகவும் மேலும் அவர் செய்த பெரிய தவறு இந்த திரைப்படத்தில் நடித்தது என்றும் கூறியுள்ளார்.