என்னதான் இருந்தாலும் எனக்கு இந்த நடிகர் தான் ஸ்பெஷல்..! உண்மையை ஒப்புக்கொண்ட நடிகை நயன்தாரா..!

nayanthara favorite actor: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.  இவரை லேடி சூப்பர் ஸ்டார் என திரையுலகில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு மலையாள நடிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

பொதுவாக மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மிகவும் அழகான தோற்றத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏகத்துக்கு ரசிகர் கூட்டத்தை விரட்டி விட்டார்.

பொதுவாக திரையுலகில் பிரபலமாக இருந்தாலே பல சர்ச்சைகளில் சிக்கி தான் ஆக வேண்டும் அந்த வகையில் சிம்பு காதல் தோல்வியை தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்தார் அந்த காதலும் தோல்வியில் முடிந்ததன் காரணமாக சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் லிவிங் டு கெதர் முறைப்படி வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்துக் கட்டி விட்டது இந்நிலையில் நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை நயன்தாரா சமீபத்தில் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடும் நடிகை நயன்தாரா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளர்.  அவ்வாறு அவர் வெளியிட்ட தகவல் என்னவென்றால் நான் எத்தனை நடிகருடன் நடித்து இருந்தாலும் என்னுடைய பெவரட் நடிகர் என்றால் அது தல அஜித் தான் என கூறியுள்ளார்.

தல அஜித்துடன் நடிகை நயன்தாரா முதல் முதலாக பில்லா திரைப்படத்தில் தான் என்று கொடுத்தார் இவ்வாறு இவர்கள் இணைந்த முதல் திரைப்படமே மிகப் பிரமாண்டமான வெற்றி பெற்றதன் காரணமாக நயன்தாரா மிகவும் பிரபலமாகி விட்டார்.

இந்நிலையில் அஜித்தின் பல மெகாஹிட் திரைப்படத்தில் நடித்துள்ள நயன்தாரா சமீபத்தில் சுதா கொங்கரா இயக்க இருக்கும் திரைப்படத்திலும் நயன்தாரா தான் மேக்ஸிமம் கதாநாயகியாக இருப்பார் என தல அஜித்தின் ரசிகர் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

nayanthara
nayanthara

Leave a Comment