அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடம்.! அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவாரா நயன்தாரா.? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும் இவரின் நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் இவரின் மீது காதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.

அந்த வகையில் பிரபுதேவா, சிம்பு ஆகியோர்களை தொடர்ந்து தற்போது கடந்த ஐந்து வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் பொழுது இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கும் நிலையில் பல திரைப்பிரபலங்கள் இவர்கள் இன்னும் ஒரு வருடத்திற்குள் பிரிந்து விடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் நயன்தாரா உச்ச நட்சத்திரமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வருகிறார். அதோடு தென்னிந்திய சினிமாவில் இவர் தான் ஹீரோக்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நடிகை. அந்த வகையில் சுமார் 6 கோடி முதல் 7 கோடி வரை ஒரு படத்துக்கு சம்பளமாக பெற்று வருகிறார்.

இவ்வாறு சினிமாவில் வளர்ந்துள்ள இவருக்கு தற்போது பெரும் நெருக்கடியான கவலை கூறிய ஒரு சூழ்நிலையில் இருந்து வருகிறார்.அதாவுது பொதுவாக பெண் குழந்தைகளை பெற்ற தந்தைகள் அனைவருமே தனது இறப்பிற்கு முன் தனது மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்றும் அவளுக்கு என்ற ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கமாக இருக்கிறது.

nayanthara
nayanthara

அந்த வகையில் நயன்தாராவின் அப்பாவான குரியன் கொடியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பல சிகிச்சைகள் செய்தும் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே நயன்தாராவின் அப்பா விரைவில் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள கூறி வருகிறாராம்.

சமீபத்தில் கூட, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானத்தில் கொச்சி சென்றது கூட நயன்தாராவின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று தானாம் எனவே தனது அப்பாவின் ஆசையை நயன்தாரா நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.