வலையில் மாட்டிய மீனைப்போல் சிக்கிக் கொண்ட நயன்தாரா.! இந்தமுறை தப்பவே முடியாது.?

0

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி காட்டி திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தையும் தேர்ந்தெடுத்து அதில் சோலோவாக நடித்தும் வெற்றி கண்டு வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய காதலையும் ஒரு பக்கம் என்ஜாய் பண்ணி வருகிறார். நயன்தாரா முதன் முதலில் சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து வந்தது நமக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் இவர் கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார்..

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெக்கேஷனுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு ரொமான்ஸாக புகைப்படம் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள். இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள் ஆனால் இருவரும் எந்த ஒரு பதிலும் கூறாமல் மௌனம் பார்த்து வருகிறார்கள்.

மேலும் சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து விட்டதாக தகவல் வெளியாகியது இதற்கு விளக்கம் அளித்த விக்னேஷ் சிவன் இதுவரை சமூகவலைதளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு தடவை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் தாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம் அதே போல் எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் இலட்சியங்கள் இருக்கிறது அதனை அடைந்து முடித்த பிறகுதான் திருமணம் என்று கூறினார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் அவர்களிடம் ரசிகர் ஒருவர் ஏன் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவில்லை எனக் கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு ரொம்ப செலவு ஆகும் அதனால் அதற்கான பணத்தை சேர்த்து விட்டு கொரோனா ஊரடங்கு எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன் என கூறினார்.

இந்த நிலையில் நயன்தாரா தனது தந்தை ஆசைக்கு இணங்க விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம் ஏனென்றால் நயன்தாராவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனது தந்தையை காண நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்று வந்துள்ளார் அங்கு நயன்தாராவின் தந்தை தனது மகளை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என ஆசை பாடுகிறாராம் இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றி வைக்கவேண்டும் என நயன்தாரா விரைவில் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய சினிமா வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற அச்சமும் இருப்பதாக நெருங்கிய தோழிகளிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பொழுது திருமணம் செய்து கொள்ள வேண்டுமா இல்லை பிறகு திருமணம் செய்து கொள்ளலாமா என்ற அச்சத்திலேயே நயன்தாரா இருக்கிறார். சொல்லப்போனால் மீன் வலையில் மாட்டிய மீனைப்போல்  எந்த முடிவை எடுக்க வேண்டும் என தடுமாறி வருகிறாராம்.