கோடிக்கணக்கில் காசு கொடுத்து “கிப்ட்” வாங்கிய நயன்தாரா – அசந்துப்போன காதலன் விக்னேஷ் சிவன்.! என்ன தெரியுமா.?

nayanthara-and-vignesh
nayanthara-and-vignesh

சினிமாவுலகில் பயணிக்கும் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் ஏதோ ஒரு வகையில் காதல் வயப்பட்டு சினிமா பிரபலங்களை திருமணம் செய்து கொள்கின்றனர் அந்த வகையில் அஜீத் ஷாலினி, சூர்யா ஜோதிகா ஆகியவர்களை தொடர்ந்து பல பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

அந்த லிஸ்டில் சேர இருப்பவர்கள்தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். அதேசமயம் தனது கேரியரை தொலைக்காமல் இருப்பதற்காக இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர் படங்களை தயாரிப்பது விக்னேஷ் சிவன் படங்களில் நயன்தாரா.

நடிப்பது மற்றும் பிசினஸ் இருவரும் சேர்ந்து லாபம் பார்த்து வருகின்றனர் இதனால் இவர்களது சினிமா பயணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது விக்னேஷ் சிவன் அண்மையில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர்களை  வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகிறது.

இதனை தொடர்ந்து நயன்தாரா ஆக்சிஜன், கனெக்ட்  ஆகிய திரைப்படங்களில் நடிக்க மறுபக்கம் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துடன் முதல் முறையாக கைகோர்த்து AK62 திரைப்படத்தை இயக்க ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் விக்னேஷ் சிவன் அண்மையில் உலகில் மிகச்சிறந்த கார்களில் ஒன்றாக பார்க்கப்படும் சொகுசு காரான ஃபெர்ராரி காரின் முன்பு நின்று.

nayanthara and vignesh
nayanthara and vignesh

அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகிய நிலையில் தற்போது அந்த காரை நயன்தாரா தான் விக்னேஷ் சிவனுக்கு பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது அந்த காரின்மதிப்பு மட்டுமே சுமார் 7.5 கோடி என தெரியவருகிறது. திருமணத்திற்கு முன்பாக ஒரு சிறப்பான காரை அவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளதாகக் ரசிகர்கள் கூறுகின்றனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு தகவல்கள் உலா வருகின்றன.