36 வயதிலும் 20 வயது நடிகையை போல் மின்னும் நயன்தாரா!! அழகின் ரகசியம் இது தானாம்..

0

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  நடிப்பில் தற்போது வெளிவந்து தினபூமி திரைப்படம் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மிலிந்து ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த மற்றும்  மலையாளப் படங்கள் என தற்போது பிசியான நடிகையாக உள்ளவர் நயன்தாரா.

இப்படி தொடர்ந்து பதினைந்து வருடங்களுக்கு மேல் 35 வயதை கடந்தும் தனது மார்க்கெட் குறையாமல் இருக்க,  பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருப்பதற்கு காரணம் அவரின் அழகுதான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அந்த வகையில் இவரின் அழகின் ரகசியத்திற்கு காரணம் என்னவென்பது தற்போது இணையதளங்களில் ட்ரெண்டாகும் விஷயமாக உள்ளது.

என்னதான் இவர் எவ்வளவு பிசியாக சூட்டிங்கில் இருந்தாலும் இவர் எப்போதும் தொடர்ந்து தண்ணீர் அருந்தி கொண்டே இருப்பாராம். அது மட்டுமல்லாமல் உணவாக அதிகமான பழங்களை எடுத்துக் கொள்வாராம். அதோடு கூடவே உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை தவறாமல் தொடர்ந்து செய்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம்.

மேலும் முகத்திற்கு பயன்படுத்தும் எந்த ஒரு அழகு சாதனப் பொருளாக இருந்தாலும் அது  இயற்கையை சார்ந்தே இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.