நயன்தாரா ஜெய் நடித்துள்ள அன்னபூரணி திரைப்படத்தின் டிரைலர் இதோ..!

nayanthara annapoorani trailer : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவரை அனைவரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று தான் அன்போடு அழைக்கப்படுவார் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கடைசியாக நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகிய ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தன்னுடைய முத்திரையை பதித்தார். அதுமட்டுமில்லாமல் ஜவான் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதளவு கொண்டாடப்பட்டது இந்த நிலையில் நயன்தாரா தன்னுடைய 75 ஆவது திரைப்படமான அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் ட்ரய்டண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது மேலும் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ், ரெடீன்ஸ் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, கே எஸ் ரவிக்குமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் படத்திற்கு தமன் தான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் நவம்பர் 27ஆம் தேதி  அன்னபூரணி திரைப்படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளது ஒரு சிறந்த செப் ஆக வேண்டும் என கனவு காணும் ஒரு பெண் குடும்பத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் ஒரு பிராமண பெண் கறி சமைப்பது தவறா என்ற கேள்விகள் குழப்பங்கள் நிலவி வந்தன இதையெல்லாம் தாண்டி எப்படி தன்னுடைய லட்சியத்தை சாதிக்கிறார் என்பதுதான் அன்னபூரணி திரைப்படத்தின் ஒன் லைன் கதை..