தல பொங்கலை தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கொண்டாடிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்

0
nayan
nayan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வளம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் தற்பொழுது பல திரைப்படங்களையும் தயாரித்து தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். மேலும் நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

என்னதான் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் தான் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் சமந்தா விஜய் சேதுபதி என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

நயன்தாரா நடிப்பில் o2 திரைப்படம் வெளியாகி ஓரளவு விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக கனெக்ட் திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை தற்பொழுது நயன்தாரா ஜவான் கோல்ட் காட்பாதர் இறைவன் ஆகிய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஹனிமுனுக்காக  வெளிநாடுகளில் சுற்றித்திரிந்தார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அதன் பிறகு தங்களுடைய வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி என்று தான் கூற வேண்டும் இதற்கு பலரும் வாழ்த்து கூறி வந்தார்கள் ஆனாலும் திருமணமாகி 4 மாதத்தில் குழந்தை பிறந்ததால் எப்படி சாத்தியம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். அந்த சர்ச்சைகள் எல்லாம் முடிந்து தற்பொழுது இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் நயன்தார தன்னுடைய 38 வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார் அதனைத் தொடர்ந்து தற்பொழுது தன்னுடைய டுவின்ஸ் குழந்தைகளுடன் முதல் பொங்கலை கொண்டாடி இருக்கிறார்கள் அதில் அவர்களின் இரண்டு குழந்தைகளும் நன்றாக வளர்ந்துள்ளது தெரிகிறது.

nayanthara vignesh shivan
nayanthara vignesh shivan