நயன்தாராவை ரொமான்டிக் மூடில் வைத்திருக்கும் விக்கி.. புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

Nayanthara  : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இறைவன் வெற்றிநடை கண்டு வருகிறது. அதனை தொடர்ந்து நயன்தாரா கைவசம் டெஸ்ட், நயன்தாரா 75, தனி ஒருவன் 2 போன்ற படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது சினிமா உலகில் வெற்றி நடிகையாக ஓடும் நயன்தாரா தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார் மேலும் பல்வேறு நிறுவனங்களின் மீது முதலீடு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவரும்  சில நிறுவனங்களை உருவாக்கி தற்போது நல்ல காசு பார்த்து வருகிறார். இதனால் நயன்தாராவுக்கு நாலாபக்கமும் காசு வருவதால் சந்தோஷத்தில் இருந்து வருகிறார். அதை வெளிப்படுத்தும் வகையில் மீதி நேரங்களில் தனது குடும்பத்துடன் இவர் மகிழ்ச்சியாகவும் இருக்கும் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளி வருகின்றன.

தனது மகன்களின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ரொமான்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் எப்பொழுதுமே ரொமான்டிக் மூடில் இருப்பீங்க போல.. பார்க்க அழகாக இருக்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ரொமான்டிக் மூடில் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை..

Nayanthara
Nayanthara
Nayanthara
Nayanthara