நயன்தாராவுடன் இணைந்த விக்னேஷ் சிவன்.! வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும்  வலம் வருபவர் நடிகை நயன்தாரா, இவர் ரசிகர்களின் கனவுக்கன்னி என்றே கூறலாம். அதேபோல் இவர் சமீபகாலமாக நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார், இந்த நிலையில் நயன்தாரா அவள் என்ற பேய் படத்தை இயக்கிய மிலிந்த் என்பவரின் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் தகவல் நேற்று வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் மூலம் நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் என்ற படத்தின் பெயரை டைட்டிலாக வைத்துள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார், இதற்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.