மீண்டும் நயன்தாரா உங்களிடம் காதலை கூறினால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள் நடிகர் சிம்புவின் அதிரடி பதில்.!

தமிழ்சினிமாவில் பல சர்ச்சைகளை கடந்து வந்தவர் நடிகர் சிம்பு, சினிமா நடிகர்கள் நடிகைகள் என்றாலே சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது, அந்தவகையில் நடிகர் சிம்புவிற்கு எப்பொழுதும் சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும்.

அதேபோல் சினிமா ரசிகர்கள் சிம்புவின் படத்தை பற்றி பேசுகிறார்களோ இல்லையோ அவரின் சர்ச்சையை பற்றி அதிகமாகப் பேசியுள்ளார்கள், நயன்தாராவின் காதல் விவகாரத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வந்தார்.

அதுமட்டுமில்லாமல் இடையில் பீப் சாங் என்ற பாடல் இணையதளத்தில் கசிந்தது சிம்புவின் டோட்டல் இமேஜையும் தரைக்கு இறங்கி விட்டது, இப்பொழுது சிம்பு அனைத்தையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு மாநாடு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த திரைப்படம் ட்ராப் ஆகாமல் ரிலீஸ் வரை செல்ல வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள், இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் சிம்புவிடம் ஒருவேளை நடிகை நயன்தாரா வந்து உங்களிடம் காதலிக்கிறேன் என்று கூறினால் என்ன செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சிம்பு சற்றும் யோசிக்காமல் நாங்கள் இப்பொழுது நல்ல நண்பர்கள் மட்டுமே வேற எதுவும் கிடையாது வேற எதுவும் வேணாம் என அதிரடியாக கூறியுள்ளார்.

Leave a Comment